சம்பூர் மாவீரர் துயிலுமில்லத்துக்கான விசேட போக்குவரவு ஏற்பாடுகள்

திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகச் செல்லும் உறவுகளுக்காக நாளைய தினம் சுவடுகள் தமிழர் அமையத்தின் நிதி அனுசரனையுடன் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவினரால் விசேட இலவச பஸ்சேவைகள் இடம் பெறவுள்ளன.எனவே சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்துக்கு வருகை தரும் உறவுகள் கீழுள்ள விபரங்களுக்கமைய தமக்கான சேவையினைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. அதன் விபரங்கள் வருமாறு:

* அனைத்து பஸ் சேவைகளும் மதியம் 2.30இற்கு ஆரம்ப இடத்திலிருந்து புறப்படும்

01. வெருகல் —இப் பேருந்து வெருகல் முகத்துவாரத்தில் இருந்து புறப்பட்டு மாவடிச்சேனை பூநகர் கிளிவெட்டி பாலைத்தோப்பூர் மூதூர் சம்பூர் ஊடாகத் துயிலுமில்லத்தை வந்தடையும்

02.வெருகல் —இப் பேருந்து வெருகல் முகத்துவாரத்தில் இருந்து புறப்பட்டு இலங்கைத்துறை முகத்துவாரம் சீனன்வெளி உப்பூறல் நல்லூர் பாட்டாளிபுரம் சந்தோசபுரம் கடற்கரைச்சேனை சம்பூர் ஊடாகத் துயிலுமில்லத்தை வந்தடையும்

03.அதியமான்கேணி —இப் பேருந்துஅதியமான் கேணிப் பாடசாலை முன்பாக இருந்து புறப்பட்டு நீலாப்பளை கங்குவேலி ஐம்த்தெட்டு மல்லிகைத்தீவு மணல்ச்சேனை மூதூர் சம்பூர் ஊடாகத் துயிலுமில்லத்தை வந்தடையும் .

04. தம்பலகாமம் —இப் பேருந்து தம்பலகாமத்தில் இருந்து புறப்பட்டு ஆலங்கேணி ஈச்சந்தீவு கிண்ணியா இறால்க்குழி மூதூர் சம்பூர் ஊடாகத் துயிலுமில்லத்தை வந்தடையும்

05 திரியாய் —இப் பேருந்து திரியாயில் இருந்து புறப்பட்டு குச்சவெளி நிலாவெளி சாம்பல்த்தீவு சல்லிக் கோயில் மற்றும் திருகோணமலை சிவன்கோயில் சீனன்குடா கிண்ணியா இறால்க்குழி மூதூர் சம்பூர் ஊடாகத் துயிலுமில்லத்தை வந்தடையும்

06. இத்திக்குளம். —இப் பேருந்து இத்திக்குளம் பழைய மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக இருந்து புறப்பட்டு சின்னக்குளம் பள்ளிக்குடியிருப்பு தங்கபுரம் கட்டைபறிச்சான் கடற்கரைச் சேனை சம்பூர் ஊடாகத் துயிலுமில்லத்தை வந்தடையும் .

நன்றி
மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழு
சம்பூர் ஆலங்குளம்
மாவீரர் துயிலுமில்லம்
தொடர்புகளுக்கு —0768923576 /077736999