தமிழரின் அறிவு அழிக்கப்பட்டதா? தை பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா? உண்மை இதோ

551 Views

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் பலரும் தமிழ் மாதமான இந்த தை முதல் நாளை பொங்கல் பண்டியாக தமிழர் திருநாளாக கொண்டாடுகிறார்கள். மேலும் இந்தியாவின் பல மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு விதமான கலாச்சாரத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த இயற்கையாகிய பிரபஞ்சத்தை மையமாக கொண்டு காலநிலை கணிப்புகள் மூலமே பண்டிகைகளை நம் முன்னோர்கள் உருவாக்கியுள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் அறிவார்ந்த நம் முன்னோர்களின் அறிவியலை மூடி மறைத்து தங்களின் கல்வி முறையை புகுத்தி ஆங்கிலேயர்கள் சதி செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதற்கு சான்றாக இந்த தமிழர் திருநாளை நாம் சொல்லலாம். ஆம், சூரியனை கொண்டே நேரத்தை கணக்கிட்டது போல பண்டிகைகளும் கணக்கிடப்பட்டது.

இதில் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே கிழக்கில் உதிக்கும். பின் வடகிழக்கு நோக்கி நகர்ந்து மறுபடியும் ஒரு புள்ளியில் நின்று மீண்டும் தெற்கு நோக்கி திரும்பும்.

அதே சூரியன் மீண்டும் கிழக்கில் உதித்து மறுபடியும் தென்கிழக்கு நோக்கி நகரும். இப்படியாக கிழக்கில் உதிக்கும் சூரியன் வடகிழக்கு, தென்கிழக்கு என நகர்ந்து முன் போல் கிழக்கில் உதிக்க ஆகும் காலம் ஒரு வருடம்.

இதில் தென்கிழக்கில் சூரியன் இருக்கும் நாளே தைப்பொங்கல் பண்டிகையாகவும் உயிர் வாழ்க்கைக்கும் உலக இயக்கத்திற்கும் மூல சக்தியாக திகழும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

நம் முன்னோர்கள் பருவ நிலையை கணக்கிட்டதற்கு சான்று இதைவிட வேறென்ன வேண்டும் ..

Leave a Reply