தமிழனின் பார்வையில் மூலமொழி ஆய்வு

434 Views

முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவில் எதிர்வரும் 22.08.2020 சனிக்கிழமை ‘கதவு’ ஆங்கிலத்தில் ‘Door’ என்ற சொல் பற்றிய சொற்பொழிவு நடைபெறவுள்ளது.

22ஆம் திகதி நடைபெறும் சொற்பொழிவில், தமிழின் “கதவு” என்னும் சொல், ஆங்கிலத்தில் “door” என வழங்கப்படுகிறது. இச்சொல், ஆங்கிலத்தில் மட்டுமின்றி ‘thyra’ in Greek, ‘thur’ in German, ‘tor’ in Old High German, ‘daur’ in Gothic, ‘dvara’ in Sanskrit என்றவாறு  வழங்குவதைக் கால்டுவெல் உறவுபடுத்தியுள்ளார். மேற்குறிப்பிட்ட சொற்கள் அனைத்தையும் ஓர் மொழிக்குடும்பச்  சொல் உறவாகவே கீழை-மேலை இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல் அகராதிகள் காட்டுகின்றன என்பது பற்றியும்,

வெட்டுதல்  எனப் பொருள் படும் “துமி” என்னும் பழந்தமிழ்ச் சொல்லே இரண்டு எனப்பொருள் படும்  “துவார” என்னும் சமற்கிருதச் சொல்லிற்கும், “door” என்னும் ஆங்கிலச் சொல்லிற்கும் மூலம்  என்பதை விளக்கும் முனைவர் கு.அரசேந்திரனாரின்  சொற்பொழிவாக அமையவுள்ளது.

கடந்த மாதம் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சொற்பொழிவில்  ஆங்கிலத்தில் உள்ள ‘ EYE’ ‘ஐ – கண்’ என்ற சொல்லும், சமஸ்கிருதத்தில் உள்ள அக்க்ஷி (Akshi ) என்ற சொல்லும் தமிழ் மொழியிலிருந்து பிறந்தவை என்பது தொடர்பாக  ஆராயப்பட்டது.

இந்த சொற்பொழிவு ஒரு மணி நேரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 30 நிமிடங்கள் சொல் பற்றி முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் சொற்பொழிவாற்றுவார். அடுத்து வரும் 30 நிமிடங்கள் இந்த சொல் தொடர்பான நேயர்களின் கேள்விகளுக்கு அவர் விளக்கமளிப்பார்.

நிகழ்வு நடைபெறும் நேரம்:

இந்திய நேரம்:  பிற்பகல் 5.30 மணி

பிரித்தானிய நேரம்:  பிற்பகல் 1.00 மணி

அமெரிக்க நேரம்:  காலை 7.00 மணி

அவுஸ்திரேலிய நேரம்:  இரவு 10.00 மணி

இந்த சொற்பொழிவு நேரலையாக நடைபெறவுள்ளது. இதற்கான இணையவழி தொடர்புகளுக்கு:

facebook.com/NostraticTamil

twitter.com/NostraticTamil

nostratictamil.com

youtube.com/channel/UC-4MgLJ4K3anle5KJoy-noA

Leave a Reply