தமிழக தேர்தலில் – முதல் முறையாக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தெரிவாகியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்களில் வெற்றி பெற்றாலே போதும் என்ற நிலையில் 150 இற்கு மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.
இதையடுத்து தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் நிலவி வந்த அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிகாரபூர்வ முடிவுகள் வெளிவருவதற்கு முன்னதாக திமுக கட்சி தனித்து 118 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும் பாஜக முத்த தலைவருமான ராஜ்நாத் சிங் மு.க.ஸ்டாலினுக்கு ருவிற்றரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதே போல் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆட்சி அமைக்கும் திமுக தலைவர் திரு ஸ்ராலின் அவர்கள் ஈழத்தமிழ் மக்கள் குறித்து தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குக்குறுதிகளை நிறைவேற்றுவார் என ஈழத்தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதுடன், அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றனர்.