தந்தை செல்வாவின் 46 ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலியும் நினைவுப் பேருரையும் இன்று (26) காலை 10 மணியளவில் தந்தை செல்வா நினைவு அறங்காவலர் குழுதன தலைவர் ஓய்வு நிலை ஆயர் சு.ஜெபநேசன் தலைமையில் தந்தை செல்வா நினைவிடத்தில் இடம்பெற்றது.
இதன் போது தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தந்தை செல்வாவின் தூபிக்கு மலர் மாலை அணிவித்து சமாதியில் மலரஞ்சலியும் செலுத்தினார்.