ஜே.வி.பி.யின் தலைமைப் பதவியில் தற்போது மாற்றம் எவுதும் இடம்பெறாது என்று அந்தக் கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
நடைபெற்று முடிவடைந்த பொதுத்தேர்தலில் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கும் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த முறை அந்தக் கட்சியின் சார்பில் அறுவர் பாராளுமன்றத்தில் இருந்தனர். இம்முறை இருவர் வாக்களிப்பு மூலமும், ஒருவர் தேசியப்பட்டியல் ஊடாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
எனவே, ஜே.வி.பியின் தலைமைப்பதவியில் விரைவில் மாற்றம் இடம்பெறவுள்ளது எனவும், புதிய தலைவராக லால்காந்த நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே ஜே.வி.பிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை எனவும், தலைமைப் பதவியில் தற்போது மாற்றம் இடம்பெறாது என வும் ஜே.வி.பி. உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.