ஜப்பானில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் தீ விபத்து

ஜப்பானில் உள்ள ஒக்கினவா மாகாணத்தில் உள்ள அமெரிக்க படையினரின் மிகப் பெரிய விமானப்படைத் தளத்தில் நேற்றுக் காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ சற்று நேரத்தில் விமானப்படைத் தளத்தின் பிற பகுதிகளிலும் மளமளவெனப் பரவியது. இதனையடுத்து விமானப்படைத் தளத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயற்பட்டு தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் இதுவரை உடனடியாக தெரியவரவில்லை. எனினும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சுமார் 2ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த விமானப்படைத் தளத்தில் 25ஆயிரத்து 800 அமெரிக்க வீரர்களும், அவர்களது குடும்பத்தினர் 19,000 பேரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.