ஜனாசாக்கள் எரிப்பதை எதிர்த்து வாழைச்சேனையில் போராட்டம்

ஜனாசாக்கள் (உடல்கள்) எரிப்பதை எதிர்த்து தேசிய ரீதியாக  வெள்ளைத் துணியூடாக மண்ணறையை மறுப்பவர்களுக்கு அறிவூட்டும் அமைதியான அடையாள எதிர்ப்புப் போராட்டம் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

நாட்டில் அனைத்து இன மக்களதும் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் கல்குடா வாழ் முஸ்லிம் மக்களின் ஏற்பாட்டில் வாழைச்சேனை பிரதேசத்தில் இன்று  வெள்ளைத் துணியை கட்டும் அமைதியான அடையாள எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

01 7 2 ஜனாசாக்கள் எரிப்பதை எதிர்த்து வாழைச்சேனையில் போராட்டம்

இதன்போது வாழைச்சேனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயலின் நுழைவாயிலில் பிரதேசத்திலுள்ள அமைப்பின் பிரதிநிதிகள், சிறுவர்கள், மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு வெள்ளைத் துணியை கட்டி தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டினர்.

01 1 1 ஜனாசாக்கள் எரிப்பதை எதிர்த்து வாழைச்சேனையில் போராட்டம்
 

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்தி அவர்களது ஜனாசாக்களை இஸ்லாமிய முறைப்படி புதைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply