ஜனநாயக வழியில் பயணித்த தமிழர்கள் மீது பெரும்பான்மை சிங்களவர்கள் தாக்குதல்

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலில் 3 ஆம் நாளாகிய இன்று பொத்துவில் தொடங்கி நல்லூர் வரையான திருவுருவப் படம் தாங்கிய நினைவூர்தி திருகோணமலை மாவட்டத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை,கப்பல்துறைப்பகுதியில் வைத்து, சிறிலங்கா புலனாய்வாளர்களும் காடையர்களும் இணைந்து  ஊர்தி மற்றும் திருவுருவப்படம் என்பவற்றினை அடித்து நொறுக்கியதோடு, ஊர்தியின் சாரதி மற்றும் உடன்பயணித்தோர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த இருநாட்களாக புலனாய்வாளர்கள் ஊர்தியினைப் பின்தொடர்ந்து வந்ததோடு, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லீம் காடையர்களால் எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.