செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள்

2020ஆம் ஆண்டிற்குள் செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த செயற்கை சூரியனுக்கு H.L- 2M டோகாமாக் என்று பெயரிட்டுள்ளனர். செயற்கை சூரியனில் பொருத்தப்பட இருக்கும் சுருள் (coil) அமைப்பு ஜுன் மாதம் அளிக்கப்பட இருக்கின்றது. அது கிடைத்ததும், 2020ஆம் ஆண்டில் அதை வானில் நிறுவ முடிவு செய்துள்ளனர்.

நியூக்கிலியர் பியூசன் எனப்படும் அணு இணைவு (Nuclear fusion) மூலம் கட்டுப்படுத்தப்படும் செயற்கை சூரியனில், 200 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பமும் வெளிச்சமும் உருவாகும் என்றும், அதிலிருந்து சுத்தமான மற்றும் அளவில்லாத எரிசக்தியைப் பெறமுடியும் என்றும் சீன விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.