செங்கடலில் பற்றி எரியும் கப்பல்

312 Views

ஈரானின் எண்ணெய்க் கப்பல் மீது செங்கடல் பகுதியில் பாரிய தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து கப்பல் தீப்பிடித்து எரிவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதல் காரணத்தினால் கப்பலிற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், கடல் நீரில் எண்ணெய்க் கசிவு கலப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கப்பல் மீது பயங்கரவாத தாக்குதலே இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் சௌதி அரேபிய துறைமுகமாக கெட்டாவிலிருந்து 120 கிலோமீற்றர் தொலைவிலேயே ஈரானின் எண்ணெய்க் கப்பல் தீப்பிடித்து எரிகின்றது எனவும் தெரிவித்துள்ளன.

இது பயங்கரவாத தாக்குதல் என பாதுகாப்பு நிபுணர்களும் கருதுவதாக அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Leave a Reply