சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்

தென்னிந்திய திரைப்பட இயக்குநரும் தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தையார் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையான்குடி அருகே அவரின் சொந்தக்கிராமமான அரணையூரில் இன்று பிற்பகல் அவர் உயிரிழந்துள்ளதாகவும் வயோதிப முதுமை காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீமானின் தந்தை மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.