சீன உயர் குழு கொழும்பை வந்தடைந்தது; தனிமைப்படுத்தல் இல்லை! பி.சி.ஆர். பரிசோதனை மட்டும்

சீன கம்யூனிசக் கட்சியின் அங்கத்தவர்கள் உள்ளடங்கலாக 26பேரைக் கொண்ட உயர் மட்டத்தூதுக் குழு இலங்கை வந்துள்ளது. நேற்றிரவு 7.40 மணியளவில் இலங்கை வந்துள்ளனர். இதனை சீனத்தூதரகத்தின் பேச்சாளர் லூவோ உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை இந்த உயர்மட்ட தூதுக்குழுவினர் சந்திப்புக்களை நடத்தவுள்ளது. இன்று இந்தச் சந்திப்பு இடம்பெறும்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன பிரதிநிதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் அவர்களிடம் பிசிஆர் பரிசோதனை மாத்திரம் இடம்பெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹர்சா டி சில்வா எழுப்பியகேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீன பிரதிநிதிகள் குழுவினர் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் அவர்கள் ஒருநாள் விஜயமாக இங்கு வருகின்றனர் அவர்கள் உயர்மட்ட பிரதிநிதிகள் அவர்கள் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீன பிரதிநிதிகள் குழுவை வரவேற்கவுள்ள இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய சீன பிரதிநிதிகள் தொடர்பில் பின்பற்றப்பவேண்டிய சுகாதர விதிமுறைகள் தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply