சீனாவை கடும் புயல் தாக்கியதில் 22 பேர் பலி, மில்லியன் மக்கள் இடம்பெயர்வு

706 Views

சீனாவை லெகிமா எனப் பெயரிடப்பட்ட புயல் காற்று தாக்கியதில் 22 பேர் கொல்லப்பட்டதுடன், ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சீனா தகவல்கள் தெரிவிக்கின்றன.

புயல் காற்றினால் நேற்று (10) காலை இடம்பெற்ற நிலச்சரிவிலேயே பலர் கொல்லப்பட்டதுடன், 10 பேர் காணாமல் போயுள்ளனர். தாய்வானுக்கும் சீனாவின் பொருளாதார நகரமான சங்காய் நகருக்கும் இடையில் உள்ள வென்லிங் பகுதியிலேயே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த புயல்காற்று கடுமையாக இருக்கும் என முதலில் கணிக்கப்பட்டபோதும், பின்னர் அதன் தாக்கம் குறைந்ததால் அதிக சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புயல் வடபகுதியை நோக்கி சிஜிஜாங் பகுதி ஊடாக நகர்ந்துவருகின்றது. இது 20 மில்லியன் சனத்தொகையை கொண்ட சங்காய் நகரை தாக்கலாம் என கருதப்படுகின்றது.

மீட்பு பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டுவருவதாகவும், வெள்ளம், வீழ்ந்துள்ள மரங்கள், கட்டிட இடிபாடுகள் மற்றும் மின்சாரத் தடை என்பன அவர்களின் பணிக்கு தடையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply