கண்களும் கைகளும் கட்டப்பட்டு ஒருவருடன் ஒருவர் பிணைக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர்களை சீன பொலிசார் அழைத்துச் செல்லும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
அடையாளம் தெரியாத ஒருவர் ஆளில்லா விமானம் மூலம் இதை எழுத்து யூ-ரியூப் இணையத்தில் பதிவிட்டுள்ளார். நீலம், மஞ்சள் ஆடை அணிவிக்கப்பட்ட இவர்கள் சீனாவின் சிறுபான்மையினரான யுகுர் இனத்தவர்களாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.
சிறைக் கைதிகள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு இதே பாணியில்தான் அழைத்துச் செல்லப்படுவார்கள் எனக் கூறப்படுகின்றது.
சீனாவின் ஜின்ஜிங்கின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ரயில் நிலையத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
சீனாவில் இந்த மாநிலத்திலேயே யுகுர் இனத்தவர்களும் முஸ்லிம் சிறுபான்மைனியரும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என உலகளாவிய ரீதியாக குற்றச்சாட்டுககள் எழுந்த நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
சீனாவில் சிறுபான்மை இனத்தவர்கள் பெரும் கொடுமைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள். நவீன தொடர்பு சாதனங்கள் எவ்வளவோ வளர்ந்த போதும் அங்கு நடக்கும் பல விடயங்கள் இன்னமும் இருட்டிலேயே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.