சீனாவிற்கு போட்டியாக இணைந்த ஐரோப்பிய யூனியன் – ஜப்பான்?

647 Views

போக்குவரத்து, ஆற்றல் மற்றும் டிஜிற்றல் திட்டங்கள் ஆகியவற்றில் ஐரோப்பாமற்றும் ஆசியாவை இணைக்கும் வகையிலான ஒப்பந்தம் ஐரோப்பிய யூனியன் மற்றும்ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையே யையெழுத்தாகியுள்ளது.

இந்த விடயத்தில் சீனாவின் நடவடிக்கைகளுக்குப் போட்டியாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாகக் கூறப்படுகின்றது.
இந்த ஒப்பந்தத்தில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபி மற்றும் ஐரோப்பிய
கமிஷன் தலைவர் ஜீன் கிளாடே ஜன்கர் ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர்.

இந்தகட்டுமான ஒப்பந்தத்தின் விளைவாக சுமார் 60 பில்லியன் யூரோக்கள் ஐரோப்பியயூனியன் சார்பில் செலவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு சாலையாக இருந்தாலும், ஒரு துறைமுகமாக இருந்தாலும்,
இருதரப்பும் இணைந்து நீடித்த முறையிலான மற்றும் விதிமுறைகளின்
அடிப்படையிலான ஒத்துழைப்பை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல், 60இற்கும் மேற்பட்ட நாடுகளில், ஏகப்பட்ட
முதலீடுகளைக் கொட்டி உள்கட்டுமானத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.சீனா தனது வர்த்தக மற்றும் இராணுவ நலன்களுக்காக இத்தகைய திட்டங்களை சீனா மேற்கொண்டு வருகின்றது. எனவே சீனாவிற்கு போட்டியானதாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகின்றது.

Leave a Reply