சீனாவின் வளர்ச்சியை தடுக்க கொங்கொங்கை பயன்படுத்த முனையும் அமெரிக்கா

கொங்கொங் மக்கள் சுதந்திரத்தையும், உரிமை நலனையும் பெறுவதற்கான சிறப்புச் சட்டமாக கொங்கொங் தேசிய பாதுகாப்புச் சட்டம் விளங்குகின்றது. ஆனால் அமெரிக்க அரசியல்வாதிகள் இந்த உண்மையை புறக்கணித்து, இந்தச் சட்டம் கொங்கொங் மக்களின் தன்னாட்சி உரிமையைச் சீர்குலைக்கும் சட்டமென கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த 85ஆயிரம் அமெரிக்க நபர்களும், 1300இற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களும் ஏறக்குறைய 300 பிரதேச தலைமையகங்களும் 400இற்கும் மேற்பட்ட பிரதேச அலுவலகங்களும் கொங்கொங்கில் அமைந்துள்ளன. கொங்கொங்கைப் பயன்படுத்தி சீனாவின் வளர்ச்சியை அமெரிக்கா கட்டுப்படுத்துவதானது, சொந்த நலன்களைப் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று சீன ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Leave a Reply