நளினி, முருகனை வெளிநாட்டு உறவினருடன் பேச அனுமதிக்க மத்திய அரசிற்கே அதிகாரம் உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு  தொடர்பாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் ஆகியோரை வெளிநாட்டிலுள்ள அவர்களின் உறவினர்களுடன் பேச அனுமதிப்பதற்கு மத்திய அரசிற்குத் தான் அதிகாரம் உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நளினியின் தாய் பத்மா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த தகவலைத் தொடர்ந்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.