சீனாவின் நிதி உதவி தொடர்பில் பங்களாதேசம் எச்சரிக்கை

சீனாவிடம் இருந்து பட்டுப்பாதை திட்டத்தின் அடிப்படையில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் கடனை பெறும்போது இரண்டு முறை சிந்திக்க வேண்டும் என பங்களாதேசத்தின் நிதி அமைச்சர் ஏ.எச்.எம். முஸ்த்தபா கமல் தெரிவித்துள்ளார்.

பங்காதேசம் 4 பில்லியன் டொலர்களை சீனாவிடம் இருந்து பெற்றுள்ளது. இது அதன் மொத்த கடன் தொகையில் 4 விகிதமாகும். இலங்கைக்கு நிதி உதவி செய்த பங்களாதேசம் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதன் வெளிநாட்டு கையிருப்பு 39 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு அது 45.5 பில்லியன் டொலர்களாக இருந்தது.

அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து 4.5 பில்லியன் டொலர்களை கடனா எதிர்பார்த்துள்ள பங்களாதேசம், தற்போது 1.5 பில்லியன் டொலர்களை பெறும் நிலையில் உள்ளது. பங்களாதேசத்துடன் அதிகாரிகள் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அனைத்துலக நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

பட்டுப்பாதை திட்டத்தின் அடிப்படையில் சீனா வழங்கிவரும் கடன் உதவி 2021 ஆம் ஆண்டு 35 விகிதமாக இருந்தது. தற்போது அது 84 விகிதமாக அதிகரித்துள்ளது. சீனா பூகோளஅரசியல் நலன்களை முன்னிலைப்படுத்தி கடனை வழங்குவதாக குற்றம் சுமத்தப்படும்போதும் சீனா அதனை மறுத்துவருகின்றது.

Leave a Reply