தனியாருக்கு விற்கப்படும் 700 எரிபொருள் நிலையங்கள்

இலங்கை அரசின் புதிய நிதி கட்டுப்பாடுகளால் 400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், 700 எரிபொருள் நிரப்பு நிலையங்களை அரசு தனியாருக்கு விற்பனை செய்வதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சங்க தலைவர் குமார் ராஜபக்சா தெரிவித்துள்ளார்.

எரிபொருட்களை கொன்வனவு செய்வதற்கு முன்னர் பணத்தை செலுத்த வேண்டும் என அரசின் புதிய திட்டமே நிலையங்களை மூடுவதற்கு காரணம். அதனால் 400 நிலையங்கள் பணம் இல்லாமல் மூடப்பட்டுள்ளது.

அதேசயம், 700 எரிபொருள் நிரப்பு நிலையங்களை 24 நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.