சீனாவிடமிருந்து கொரோனா மருந்தை வாங்கப் போவதில்லை – பிறேசில்

520 Views

சீனாவிடமிருந்து கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்கப் போவதில்லை என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா தெரிவித்துள்ளார்.

46 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகளை பரிசோதனைக்காக பிரேசில் வாங்க இருந்தது. ஆனால் தற்போது அவற்றை வாங்கப் போவதல்லை என பிரேசில் அதிபர் கூறியிருக்கின்றார்.

இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், “பிரேசில் மக்கள் பரிசோதனைக்கு அல்ல. நாங்கள் சீனாவின் தடுப்பு மருந்துகளை வாங்கப் போவதில்லை” என்று தெரிவித்தார்.

பிரேசில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply