சிறீலங்காவில் நம்பிக்கையிழந்த ஐரோப்பிய ஒன்றியம்

259 Views

கோவிட்-19 இன் தாக்கம் குறைவாக உள்ளபோதும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் தமது நாடுகளுக்கு பிரவேசிப்பவர்களுக்கான காட்டுப்பாடுகளை சிறீலங்கா மக்களுக்கு தளர்த்த மறுத்துவருவது சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையீனத்தை காட்டுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிறீலங்காவில் ஏற்பட்டுவரும் நோயின் தாக்கம் கடற்படையினரிடம் மட்டும் காணப்படுவது போன்ற தோற்றப்பாட்டை சிறீலங்கா அரசு ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் சிறீலங்கா அரசு அங்குள்ள சாதாரண மக்களுக்கான பரிசோதனை வசதிகளை மேற்கொள்வதில்லை என்பது பலரின் கேள்வியாக உள்ளது.

இது தொடர்பில் கொழும்பில் உள்ள பல தூதரகங்கள் ஏற்கனவே தமது சந்தேகங்களை வெளியிட்டுள்ளன. அது மட்டுமல்லாது படையினரின் நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள் மீதும் அனைத்துலக சமூகம், குறிப்பாக மேற்குலகம் நம்பிக்கை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply