கரும்புலிகளை நினைவு கூர்ந்த தமிழ் தேசிய மக்கள் கூட்டணி

174 Views

தேசிய கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு கரும்புலி மறவர்களிற்கு நெல்லியடியில் வைத்து தனது அஞ்சலியை தமிழ் தேசிய மக்கள் கூட்டணி நேற்றிரவு செலுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு கூட்டணியின் தேர்தல் பரப்புரை முதல் கரும்புலி தாக்குதல் நடத்தப்பட்ட நெல்லியடி மண்ணில் நடந்திருந்தது.

கரும்புலி தின நிகழ்வை நடத்தக்கூடாதென கைதாகி விடுவிக்கப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பகிரங்கமாக மேடையேறி கரும்புலிகளிற்கான தனது வீர அஞ்சலியை செலுத்தினார்.

நிகழ்வில் பங்கெடுத்திருந்த முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்,சுரேஸ் பிறேமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் வருகை தந்திருந்த மக்களும் தமது வீரவணக்கத்தை  கரும்புலிகளிற்கு செலுத்தினர்.

நெல்லியடியில் முதல் கரும்புலி தாக்குதல் நடைபெற்ற மத்திய மகாவித்தியாலயத்தை சூழ அஞ்சலியினை தடுக்க படையினர் காவலிருக்க அதே நெல்லியடியில் மக்கள் கூட அஞ்சலித்தமை படையினரிடையே அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

Leave a Reply