சிறிலங்கா பொலிஸ்மா அதிபரின் அடிப்படை மனு பரிசீலனை

359 Views

சிறிலங்கா பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறையை இரத்துச் செய்யும் இடைக்கால தடையுத்தரவைக் கோரி உயர் நீதிமன்றில், அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த  மனு மீதான விசாரணையை எடுத்துக் கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பாக அடுத்த மாதம் 31ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதென உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்த்தன, எல்.டி.பி.தெஹிதெனிய மற்றும் எஸ்.துரைராஜா ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழுவினர் முன்னிலையில்  குறித்த மனு 24ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

 

 

 

 

Leave a Reply