சாம்சங் குழுமத்தின் தலைவர் லீ குன் ஹி காலமானார்

405 Views

சாம்சங் குழுமத்தின் தலைவர் லீ குன் ஹி தனது 78 வயதில் இன்று  காலமானார்.

கடந்த 2014-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட லீ குன் ஹீ தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தநிலையில் இன்று காலமானார் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனது தந்தை இறந்த பிறகு அந்நிறுவனத்தின் தலைவராக  லீ குன் ஹி 1987ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அதன் பின் தமது தந்தை உருவாக்கிய சாம்சங் நிறுவனத்தை ஒரு பன்னாட்டு குழுமமாக கட்டியமைத்தார். காப்பீடு, கப்பல் நிறுவனம்,  ஸ்மார்ட்போன், டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மெமரி சிப் என தமது நிறுவனத்தை விரிவாக்கினார்.

இதுகுறித்து  சாம்சங் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் “ சாம்சங் நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ அக்டோபர் 25-திகதி காலமானார். அவர் உயிரிழந்த செய்தியை குடும்ப உறுப்பினர்கள், அவரின் மகன் உறுதி செய்தனர். லீ குன் நினைவுகளை சாம்சங் நிறுவனத்தைச் சேர்ந்த அனைவரும் பகிர்ந்து அவரின் பயணத்தை நினைவு கூர்கிறோம். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply