சவுதி அரேபியா வெளியிட்ட புதிய ரியால் – இந்தியா கடும் கண்டம்

578 Views

ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு இந்த ஆண்டு தலைமை தாங்கும் சவுதி அரேபியா, அந்நிகழ்வையொட்டி வெளியிட்ட விளம்பரம் மற்றும் புதிய சவுதி ரியாலில் காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம் இடம்பெற்றிருப்பதற்கு, இந்தியா தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விவகாரத்தை தூதரகம் மூலம் சவுதி அரசிடம் எடுத்துச் சென்றுள்ளதாக வெளியுறுத்துறையின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

“சவுதியின் அதிகாரபூர்வ ரியாலில் இந்தியாவின் எல்லை மிகவும் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பது குறித்து, இந்தியாவில் உள்ள சவுதி அரேபிய தூதர் மூலமும், ரியாத்தில் உள்ள நமது தூதர் மூலமும், சவுதியிடம் இந்தியா கவலையை தெரிவித்ததுடன், உடனடியாக அதை திருத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்று ஸ்ரீவத்சவா கூறியுள்ளார்.

Eld0osxUYAI3kl சவுதி அரேபியா வெளியிட்ட புதிய ரியால் - இந்தியா கடும் கண்டம்

“ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஜி 20 அமைப்பின் தலைமை பொறுப்பை சவுதி அரேபியா ஏற்றுள்ளதை குறிக்கும் வகையில், அந்நாட்டின் கருவூலத்துறை சார்பாக 20 ரியால் நோட்டு வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச ஒத்துழைப்பிற்கான அந்த உலகளாவிய அமைப்பின் கூட்டம், நவம்பர் 21 மற்றும் 22-ம் திகதிளில் காணொலி மூலமாக நடைபெறவுள்ளது.

இந் நிலையில்,  இந்தியா மற்றும் சவுதி ஆரேபியாவுக்கிடையில் இந்த சிக்கல் எழுந்துள்ளது.

ரியால் நோட்டில் இடம்பெற்றுள்ள வரைபடத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில், காஷ்மீர் தனி ஒரு பிரதேசமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள கில்ஜிட் பல்டிஸ்தான் மற்றும் ஆசாத் காஷ்மீர் பகுதிகளும் பாகிஸ்தானிலிருந்து பிரித்துக் காட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் எதிர்ப்பு அதிகார பூர்வமாக புகார் எதுவும் இது வரையில் தெரிவிக்கப்பட்டதாக தெரியவில்லை.

Leave a Reply