சர்வதேச யோகா நாள் இன்று-உலகம் முழுவதும் கொண்டாட்டம்

182 Views

சர்வதேச யோகா நாள் உலகின் பல்வேறு நாடுகளில் இன்று கொண்டாடப்பட்டன. 

இம்முறை இந்த தினத்தின் கருப்பொருள் ‘கொரோனா தடுப்பு’.

முதல்முறையாக 2015ஆம் ஆண்டு ஜுன் 21ஆம் திகதி தான் யோகா தினம் என்ற ஒன்று கடைபிடிக்கப்பட தொடங்கப்பட்டது.

2014 செப்டம்பர் 27ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐநா பொது சபையில் பேசியபோது, ஒவ்வொரு ஆண்டும் யோகா தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார்.

அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21ஆம் திகதி யோகா தினம் கொண்டாடப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை  அறிவித்ததன் படி யோகா நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா கொண்டாட்டம் நடத்தப்பட்டது. சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளில் இந்தியாவின் பல பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இங்கு மட்டுமின்றி உலகம் முழுவதுமே சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply