மியான்மரில் நடந்த ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பான வழக்கில் மியான்மருக்காக சர்வதேச நீதிமன்றத்தில் அந்நாட்டின் தலைவர் ஆங் சாங் சூகி இன்று முன்னிலையாகிறார்.
ரோஹிங்கியா முஸ்லீங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்புத் தாக்குதல்களை சூசி மறுத்துவரும் நிலையில் சர்வதேச நீதிமன்றம் அவருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.
இதில் 7,40,000க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்ற நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். இதில் பெரும்பாலானோர் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தனர். இந்த தாக்குதலானது இனப்படுகொலை என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய ஐநா சபை, இது இனப்படுகொலை என்று கடந்த ஆண்டு அறிவித்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை மியான்மர் அரசு மறுத்தது.
இந்நிலையில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு நீதி வழங்க கோரி மியான்மருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கொம்பியா, வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இனப்படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுக்கு எதிராக மியான்மரை தனிப்பட்ட முறையில் பாதுகாப்பதற்காக நோபல் பரிசு பெற்றவரும், அந்நாட்டின் தலைவருமான ஆங் சான் சூகி நேற்று சர்வதேச நீதிமன்றத்துக்கு வந்தார்.
வழக்கமான பாரம்பரிய உடையில் போலீஸ் புடை சூழ அவர் நீதிமன்றத்துக்கு வந்தார். சர்வதேச நீதிமன்றத்தில் இன்று ஆங் சான் சூகி ரோஹிங்கியா தீவிரவாதிகளை குறிவைத்து தான் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், நீதிமன்றத்திற்கு இந்த விவகாரத்தில் தலையிட அதிகாரம் இல்லை என்றும் வாதிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.