சம்பிக்க பிணையில் விடுதலை: ஞாயிற்றுக் கிழமைகளில் ஆஜராகவும் உத்தரவு

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று காலை பிறப்பித்துள்ளது. 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், இன்று விசாரணைகளுக்காக நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

Leave a Reply