சமகாலத்தில் நல்லிணக்கத்தை பாதிக்கும் சமூக ஊடகங்கள்

216 Views

இலங்கையில் நல்லிணக்க செயன் முறையை வலுப்படுத்துவதற்காக பன்மைத்துவம் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான உறவினை கட்டியெழுப்புவது காலத்தின் தேவையாகும். இன்றைய நவீன உலகமானது  ஊடகத்தை ஒரு அச்சாணியாக வைத்தே இயங்கி வருகின்றது. ஒரு மனிதன் தனது நாளாந்த வாழ்க்கையில் நித்திரையால் விழித்தவுடன் முதலில் பார்ப்பது சமூக ஊடகங்களையே ஆகும்.

எடுத்துக் காட்டாக  ஐரோப்பாவில் கிறிஸ்தவர்கள் நித்திரையால் விழித்தவுடன் பைபிளை எடுத்து வாசிக்கிறார்கள். இது அவர்களுடைய அடையாளம். அதேபோல் இந்த சமகால உலகில் அனைவரும் சமூக ஊடகங்களையோ அல்லது பத்திரிகையையோ எடுத்து வாசிக்கிறார்கள். அதாவது ஒரே செய்தியை எல்லோரும் வாசித்தால். இதனூடாக ஒரே தேசம் அல்லது ஒரே சமூகம் என்ற உணர்வு உருவாகும் அதேவேளை, சமூக நல்லிணக்கத்தையும் பாதிக்கத்தான் செய்கிறது.

சமூக நல்லிணக்கமானது அண்மைக் காலமாக உலக நாடுகளிடையேயும், ஒரு நாட்டிற்குள் வாழும் பண்பாட்டுச் சமூகங்களிடையேயும் ஒற்றுமை, புரிந்துணர்வு, சகவாழ்வு ஆகியவற்றை நிலை நிறுத்துவதற்காக பேசப்பட்டு வரும் எண்ணக்கருசார் ஒரு விடயமாகும். அதாவது சமூக நல்லிணக்கம் என்பது பல்லின சமூகத்தில் வாழ்கின்ற ஒரு மனிதன் சமூகத்தோடு முரண்பாடுகள் இன்றி இணக்கப்பாட்டுடன்  ஒற்றுமையாக வாழ பழகிக் கொள்ளும் நிலையே சமூக நல்லிணக்கம் எனப்படுகின்றது. இலங்கை ஒரு பல்லின, பன்மைத்துவ நாடு. இங்கு தமிழ், சிங்களம், முஸ்லிம் என அனைத்து மக்களும் வாழ்கின்றோம். நாம் இந்த இலங்கை சமூகத்தில் இன, மத, மொழி, பேதம் கடந்து சமாதானத்தை கட்டியெழுப்பும் வகையில் நல்லிணக்கத்துடன் வாழ்கின்றோமா என்பது கேள்விக்குறியே. நாளுக்கு நாள் ஏதோவொரு வகையில் நல்லிணக்கத்தை சவாலுக்கு உட்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றை உருவம் கொடுத்து உலகிற்கு அறிமுகப்படுத்துவது சமூக ஊடகங்களே.

உலகில் உள்ள ஒவ்வொரு சமூக ஊடகங்களிலும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் உள்ளீர்த்து குறிப்பிட்ட செய்திகளை அனேகமானோர் வாசிக்க வேண்டும் என்ற மனநிலையில் கவர்ச்சிகரமான தலைப்புகளை  இட்டு வெளியிடுகிறார் கள். அதனை உலகில் உள்ள ஒவ்வொரு மனிதர்களும் ஏதோ ஒரு மனநிலையில் ஒவ்வொரு செய்திகளையும் வாசிக்கிறார்கள். அங்கு நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வகையிலும், சமாதானத்தை உருவாக்கும் வகையிலும் செய்திகள் வெளியிடப்படுகின்றதா என்பது கேள்விக்குறியே.

மிக அண்மையில் நாட்டில் நல்லிணக்கம் மற்றும் பன்மைத்துவத்தை சவாலுக்கு உட்படுத்தக் கூடிய வகையில் இடம்பெற்ற சம்பவமே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு சம்பவமாகும். உண்மையில் இது மிகவும் வேதனைக்குரிய விடயமே. அதாவது நிலை மாறுகால நீதியின் அடிப்படையில் யுத்தத்தால் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு உரிமை உண்டு. ஆனால் அந்த நினைவுத்தூபி உடைப்பு என்பது மிகவும் ஒரு துயரமான விடயமாகும். இந்த குறிப்பிட்ட சம்பவத்தினை சமூக ஊடகங்கள் ஒவ்வொரு தலைப்புகளை இட்டு வெளியிட்டு வருவதை நாம் காண்கின்றோம். எடுத்துக்காட்டாக

WhatsApp Image 2021 05 13 at 9.23.02 AM 2 சமகாலத்தில் நல்லிணக்கத்தை பாதிக்கும் சமூக ஊடகங்கள்

  1. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடை ப்பு!! ஈனத்தனமான இழி செயல் – P2P மக்கள் பேரெழுச்சி இயக்கம்.
  2. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அடித்து உடைப்பு நினைவு கல்லும் காணாமல் ஆக்கப்பட் டுள்ளது.
  3. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திட்டமிட்டு உடைக்கப்பட்டமை அநாகரீகத்தின் உச்சக் கட்டம் – எம். ஏ. சுமந்திரன்.
  4. இரவேடிரவாக இடித்து அழிக்கப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி
  5. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சிங்களம் மற்றும் சிங்கள கைக்கூலிகளால் உடைப்பு.

உண்மையிலேயே குறிப்பிட்ட இந்த சம்பவம் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் சவாலுக்கு உட்படுத்தும் விடயமாகும். அவற்றை சமூக ஊடகங்கள் பல்வேறு தலைப்புகளை போட்டு நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை வேதனைக்கு உட்படுத்துவதோடு மேலும் இனங்களுக்கு இடையிலான உறவுப்பாலத்தை சிதைக்கின்ற வகையில் செயற்படக் கூடாது. அதாவது “போர் பற்றிய எண்ணங்கள் மனித மனங்களிலேயே பிறக்கின்றன” எனவே சமூக ஊடகங்கள் இவற்றை உருவாக்கி நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயற்படுவது ஊடக தர்மமல்ல.

ஒரு செய்தியை அல்லது தகவலை வெளிப்படுத்தும் சமூக ஊடகம் அதே அர்த்தத்தில் மக்களை சென்றடையக் கூடிய வகையிலான வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும். அதாவது 10 பேர் கொண்ட குழுவில் நாம் ஒரு தகவலை  கூறுகின்றோம் என்றால், அதில் கலந்து கொண்ட 10 பேரும் அதே அர்த்தத்தில் புரிந்து கொள்கிறார்களா என்பது கேள்விக்குறியே. இங்கு ஒவ்வொருவரினதும் மனநிலையும் சிந்தனை ஆற்றலும் வேறுபட்டது. எனவே ஒரு செய்தியை சமூக ஊடகத்தில் வெளியிடும் முன் நேரான வார்த்தைப் பிரயோகங்களின் ஊடாக நல்லிணக்கத்தை பாதிக்காத வகையில் உள்ளனவா என கண்காணித்து வெளியிட வேண்டியது சமூக ஊடகங்களின் கடமையே.

மேலும் இன்றைய தொழில்நுட்ப உலகி ற்கு ஈடுகொடுக்கும் வகையில் இணையத்தின் வளர்ச்சியும் அதனோடிணைந்த சமூக வலைத்தளங்களின் பாவனையும் அதிகரித்திருக்கின்றது. அது போலவே எதிர்மறையான தாக்கங்களும் முளைத்துள்ளன. இன்றைய இணையப் பாவனையாளர்களிடையே தகவல் பரிமாற்று ஊடகமாக சமூக வலைத்தளங்கள் முதன்மையிடம் பிடித்துள்ளன. ஒரு செய்தியை உடனுக்குடன் பகிரவும், அதிகமான லைக்குகளை பெறவும் பலரும் சம்பளமில்லாத பகுதிநேர தொழிலாக சமூக வலைத்தளங்களை பாவிக்கத் தொடங்கி விட்டனர். அதன் விளைவு போலிச் செய்திகளின் வருகை அதிகரித்து விட்டது. இது தனிமனித உணர்வுகளை காயப்படுத்தும் செயற்பாடாகவும் அமைந்து விட்டது.

அதாவது இலங்கையில் இணையப் பாவனை தொடர்ந்து அதிகரித்து வருவதும் ஸ்மார்ட் (திறன்பேசி) கைத்தொலைபேசிகளின் பாவனையும் சமூக வலைத்தளங்களின் மீதான மோகத்தை சகலருக்கும் தூண்டி விட்டுள்ளது. குறிப்பாக முகநூல்களில் பகிரப்படுகின்ற தகவல்கள் வேகமாக மற்றொருவரை சென்றடைவதை இலகுபடுத்தியுள்ளன. இலங்கையில் அண்மைய கண்டி, திகன கலவரமானது சமூக வலைத்தளங்களினாலேயே தீவிரமடைந்ததும், இதனால் சில நாட்களுக்கு சமூக வலைத்தளங்களை இலங்கை அரசாங்கம் முடக்கியிருந்தமையும் முக்கியமாகும். கண்டி கலவரம் தொடர்பான பதிவுகள் உள்ளூர் மொழியில் (தமிழ் அல்லது சிங்களம்) இருந்தமையும் தமிழ் வாக்கியங்களை ஆங்கில எழுத்துக்களில் (கலவரம் –ஓச்டூச்திச்ணூச்ட்) பதிந்திருந்தமையும் கலவரத்தைத் தூண்டுவதான பதிவுகள், அதிகம் பகிரப்படுவதற்கும் அதனை முகநூல் நிறுவனத்தி னால் நீக்கப்பட முடியாமைக்குமான காரணமாகவும் அமைந்து விட்டது.

Capture.JPG 2 1 சமகாலத்தில் நல்லிணக்கத்தை பாதிக்கும் சமூக ஊடகங்கள்

மற்றும் வெறுக்கத்தக்க பேச்சு (Hate speech) என்பது இனம், மதம், பாலினம் அல்லது பாலியல் நோக்குநிலை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு நபர் அல்லது குழுவிற்கு எதிரான வன்முறையை வெறுக்கும் அல்லது ஊக்குவிக்கும் பொது பேச்சு ஆகும். வெறுக்கத்தக்க பேச்சுக்கு சட்டப்பூர்வ வரையறை நாட்டிற்கு நாடு மாறுபடும். ஆனால் இன்று சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் தற்போது அதிகளவில் பரவி வருகின்றன. அதாவது சமூக ஊடகங்கள் மூலம் வெறுக்கத்தக்க பேச்சுக்களை அதிகரிப்பது மக்களின் மனதை எளிதில் மாற்றுகின்றது. ஏனென்றால் இப்போதெல்லாம் மக்கள் எப்போதும் போலவே சமூக ஊடகங்களுடனேயே நகர்கின்றனர்கள். வெறுக்கத்தக்க பேச்சுக்கள் சமூகப் பிரச்சினைகளை தூண்டுவதாக இருக்கின்றது. இவை நல்லிணக்கத்தை சிதைக்கின்ற வகையில் செயல்படுகின்றன. எடுத்துக் காட்டாக Covid – 19 நோய்களின் முஸ்லீம்களில் பரவலாக ஒரு முகநூல் பதிவு “Made in china, brand name Corona Spread in Nana” என்று ஒரு சிங்கள மொழியில் ஒரு முகநூல் இடுகை வெளியாகிது. உண்மையில் நாட்டில் இனங்களுக்கு இடையிலான உறவுப்பாலத்தை சிதைக்கும் மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் சமூக ஊடகங்கள் செயல்படுவது கவலைக்குரிய விடயமே.

உலகமே கொரோனா பெருந்தொற்று பிரச்சினையை அனுபவித்து வருகிறது. தினமும் காலையில் மரண செய்திகளை காதில் கேட்ட வண்ணமே விழிக்கிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் சமூக ஊடகங்கள் பொறுப்புவாய்ந்த வகையில் நடந்து கொள்ள வேண்டும். நாம் ஒரு பதிவை சமூக ஊடகத்தில் போட்டவுடன் அடுத்த செக்கன் உலகமே கண்டிக்கிறது என்பதை உணருங்கள். எனவே நாம் பொறுப்பு வாய்ந்த வகையில் நடக்க வேண்டியது அவசியம்.

மீடியாவை நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒன்றாக மாற்றுவதற்கு ஊடகங்கள் செயல்படும் முறையைப் பார்க்க வேண்டும். மனித ஆர்வத்தின் நேர்மறையான கதைகள் பெரும்பாலும் சமாதான முன்னெடுப்புகளில் எதிர்மறையான நிகழ்வுகளைப் பற்றி புகாரளிக்கும் கதைகளின் வெள்ளத்தில் மூழ்கும். பலர் அடையாளம் கண்டுள்ளபடி சமாதானத்தை ஒரு தனித்துவமான சவாலாக அறிக்கையிடுவதை ஊடகங்கள் துல்லியமாகக் காண்கின்றன. ஏனெனில் இது ஒரு செயல்முறையாகும். இது நீண்ட காலத்திற்கு மேலாக ஓடுகிறது. அமைதி என்பது ஒரு நிகழ்வு அல்ல.

ஊடகங்கள் அதன் உள்ளடக்கத்தை மட்டுமே படிக்கின்றன, அல்லது பார்க்கின்றன, அல்லது கேட்கின்றன. சுவாரஸ்யமான, கவர்ச்சிகரமான மற்றும் பயனுள்ள உள்ளடக்கத்தை உருவாக்குவ தற்கு சிறந்த திறமையும் விடா முயற்சியும் தேவை.

இறுதியாக, நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஊடகங்களுக்கு தார்மீக பொறுப்பு உள்ளது. ஒரு புதிய ஜனநாயக, பன்மை மற்றும் நியாயமான சமுதாயத்தை ஆதரிக்கும் மதிப்புகளை மேம்படுத்துவதில் ஊடகங்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், ஊடக சீர்திருத்தத்தை ஆதரிக்கும் அதே மதிப்புகள் நல்லிணக்கத்தை வளர்க்கும் மதிப்பீடுகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும் – கேட்க, பகிர்ந்து கொள்ள, ஒரு சிறந்த சமுதாயத்தை நோக்கி கூட்டாக இணைந்து செயல்பட ஊக்குவிக்கும் வகையில் அமைய வேண்டும். மனிதர்கள் – தனிநபர்கள், சமூகங்கள், சமூகங்கள் – எந்தவொரு சமாதான முன்னெடுப்புகளின் உயிர்நாடி, ஊடகங்களின் நுகர்வோர் மற்றும் தயாரிப்பாளர்கள் மற் றும் தினமும் நல்லிணக்க பயணங்களை மேற்கொள்பவர்கள்.

நல்லிணக்கத்திற்கு ஊடகங்கள் உதவலாம் மற்றும் உதவ வேண்டும். ஏனென்றால் இலங்கை யின் சொந்த சமாதான முன்னெடுப்பின் பாதையில் குணப்படுத்துதல் மற்றும் நீதிக்கான முன்முயற் சிகளை உருவாக்குவதற்கும் ஆதரிப்பதற்கும் இது மிகப்பெரிய சக்திவாய்ந்த வழிகளில் செயல்பட முடியும்.

“நாளை நம் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் முடிந்த வரை நல்லிணக்கத்துடன் செயற்படுவோம்.”

இப்படிக்கு

S.Aசந்தோஷ்

V.விதுசா

P.பிரசாந்தி

சமூகவியல் துறை மாணவர்கள்,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

Leave a Reply