சஜித் பிரேமதாசாவினால் இரண்டாகிப் போன ரெலோ

727 Views

பொதுஜன பெரமுன கட்சி ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசாவை ஆதரித்ததன் மூலம் தமிழீழ விடுதலை இயக்கம் இரண்டாகப் பிளவுபட்டுள்ளதாக அந்த இயக்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

யாழ். மாவட்ட ரெலோ காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஒன்றுகூடலில் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்குவதன் நன்மை தீமைகள்  தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

கட்சிக் கிளையின் உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், தங்கள் கட்சி சார்பாக சுயேட்சையாக போட்டியிடும் சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதாக அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

மேற்படி முடிவுடன் தமிழீழ விடுதலை இயக்கத் தலைமைகள் மக்களை ஏமாற்றுவதை அதன் யாழ். மாவட்டக் கிளை தொடர்ந்தும் அனுமதிக்காது. தேவை ஏற்படின் பிரிந்து சென்று தனியாக செயற்படுவோம் என யாழ். மாவட்ட கிளை செயலாளர் சில்வெஸ்டர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

 

 

Leave a Reply