சஜித் கூட்டணி தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும்

227 Views

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அணி தொலைபேசி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இந்தத் தகவலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இரண்டு அணிகள் இந்த தேர்தலில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரணில் தலைமையிலான ஓர் அணியும், சஜித் பிரேமதாசா தலைமையிலான மற்றோர் அணியும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளன என்பது எதிர்பார்க்கப்பட்டதே.

சஜித் பிரேமதாசா தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிடும் அதேவேளை ரணில் அணியின் சின்னம் பற்றி அறிவிக்கப்படவில்லை. பொதுவாக ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்திலேயே போட்டியிடுவது வழக்கம். ரணில் தலைமையிலான கூட்டணி அந்த யானை சின்னத்தைப் பயன்படுத்துமா என்பது முடிவு செய்யப்படவில்லை.

Leave a Reply