கோவிட்-19 – மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,249

560 Views

கொரோனா வைரசின் தாக்கதால் உலகில் உள்ள 177 நாடுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30,249 இற்கும் அதிகமாகும் என ஜோன்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்கழகம் நேற்று (28) தெரிவித்துள்ளது.

இறந்தவர்களின் அதிகமானவர்கள் இத்தாலியை சேர்ந்தவர்கள் அங்கு 10,023 பேர் மரணமடைந்துள்ளதுடன், தினமும் ஏறத்தாள 800 பேர் அங்கு மரணமடைந்து வருகின்றனர். அங்கு 92,500 பேர் பாதிக்கப்பட்டுள்னர்.

அதற்கு அடுத்த நிலையில் ஸ்பெயின் உள்ளது. அங்கு இதுவரையிலும் 5,812 பேர் மரணமடைந்துள்ளனர், 72,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஸ்பெயினில் 832 பேரும், இத்தாலியில் 889 பேரும், பிரித்தானியாவில் 260 பேரும், பிரான்ஸ் இல் 319 பேரும் மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரையில் 1,700 பேர் மரணமடைந்துள்ளதுடன், 115,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் இல் 2,314 பேர் மரணமடைந்துள்ளதுடன், 37,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் இது வரை 649,904 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 137,283 பேர் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply