கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக இராணுவ காவலரண்

371 Views

கோப்பாய் இராஜவீதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இராணுவத்தின் 51 ஆவதுபடைமுகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வருடங்களில் குறித்த துயிலுமில்ல வாசலுக்கு முன்னுள்ள காணியில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வந்தது 

தாயகத்தில் மாவீரர் நினைவு வாரம் 21 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதிவரை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இம்முறை பாதுகாப்பு படையினர்  கூடுதலான கண்காணிப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும் காணிக்கு அருகில் நிலையான காவலரண் ஒன்று தற்போதுஅமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நினைவேந்தல் இடம்பெறும் காணிகளில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இம்முறை மாவீரர் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படகூடாது என பொலிஸார் வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்களில் தடைகளை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply