ரஸ்யா – உக்ரைன் போர் காரணமாக கோதுமை உற்பத்தி கடும் பாதிப்புக்களை சந்தித்துள்ளதால் கோதுமை ஏற்றுமதியை இந்தியா முற்றாக நிறுத்தியுள்ளது.
தனது நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவால் இலங்கையின் கோதுமை இறக்குமதி கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
உலகிலேயே உக்ரைனில் அதிக கோதுமை விளைவிக்கப்படுவதால் உக்ரைன் – ரஸ்யா போர் அதில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி தடைப்பட்டதால் துருக்கியில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை ஒரு கிலோ 350 ரூபாய்களாக உயர்ந்துள்ளதுடன், பாணின் விலையும் 250 ரூபாயாக உயர்ந்துள்ளது.