கொழும்பில் சீனப் பெண்ணின் மர்ம மரணத்துக்குக் காரணம் என்ன? பொலிஸார் விசாரணை

424 Views

கொழும்பில் சீன நாட்டுப் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்தமை தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி, கேரன் ஹெபர் எவெனிவ் வீட்டுத்தொகுதியில் வசித்த 51 வயதான ஷென் ஷெரோன் என்ற சீனப் பெண்ணே உயிரிழந்துள்ளார். அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டுத் தொகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அங்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சீனப் பெண் வீட்டு அறையில் கட்டிலின் மீது உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேதபரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply