470 Views
சீனாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 124 பேர் குணமடைந்துள்ளனர்.இதன் காரணமாக மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்த நோயாளர்கள் வெற்றிகரமாக சிகிச்சை பெற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் வுஹான் நகரில் இருந்தே குறித்த வைரஸ் பரவியதாக தெரிவிக்கப்படும் நிலையில் தற்போது அங்கு 124 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.