கொரோனா சூழலுக்கு இடையில் இந்தியாவில் தவிக்கும் அவுஸ்திரேலியர்கள்

363 Views

அண்மையில், இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு திரும்ப எண்ணிய அவுஸ்திரேலியர்களில் 70 பேர் நாடு திரும்ப அனுமதிக்கப்படாமல் இந்தியாவிலேயே தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். இதில் சுமார் 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இவர்களுக்கு நெருங்கியவர்களாக கருதப்பட்ட 30 பேரும் அவுஸ்திரேலியாவுக்கு திரும்ப அனுமதிக்கப்படவில்லை.

தற்போது இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ள 80 பேர் அவுஸ்திரேலியாவின் வடக்கு பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், இந்தியாவில் உள்ள அவுஸ்திரேலியர்களை அவுஸ்திரேலிய அரசு கைவிட்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

“கொரோனா தொற்று உறுதிச்செய்யப்பட்டவர்களை விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வர வேண்டும் என பரிந்துரைக்கிறார்கள். இந்த பரிந்துரையில் எந்த அர்த்தமும் இல்லை,” எனக் கூறியிருக்கிறார் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன்.

Leave a Reply