கொரோனா சுகாதார நடைமுறையை மீறி முத்தம்: பதவி விலகினார் பிரிட்டன் சுகாதாரச் செயலர்

135 Views

சக பணியாளர் ஒருவரை முத்தமிட்டு கொரோனா சமூக இடைவெளியை மீறியதற்காக பிரிட்டன் சுகாதாரத் துறை செயலர் மேட் ஹேன்காக் பதவி விலகியுள்ளார்.

“நாம் கைவிட்டபோதிலும் (கொரோனா விதிகளைபின்பற்றுவதில்) நேர்மையை கடைபிடித்து இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் ஏராளமான தியாகங்களை செய்துள்ள மக்களுக்கு அரசு கடன்பட்டுள்ளது,” என்று பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

மேட் ஹேன்காக்கின் பதவி விலகல் கடிதத்தை தாம் பெற்றுள்ளது தமக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரிட்டனின் முன்னாள் சான்சலர் ஷாஜித் ஜாவித் தற்போது புதிய சுகாதார செயலராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply