கொரோனா அச்சத்தில் chloroquine phosphate மாத்திரை உட்கொண்டவர் மரணம்;மனைவி தீவிர சிகிச்சைப் பிரிவில்

அமெரிக்க அரிசோனா மாநிலத்தில் கொரோன அச்சம் காரணமாக chloroquine phosphate மாத்திரையை மருந்தாக பயன்டுத்திய 60 வயது நபர் மரணமடைந்ததுடன் மனைவி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இவர்கள் பயன்படுத்திய மாத்திரைகள் மனித மருத்துவ பயன்பாட்டிற்கானவை அல்ல என்றும் மீன்தொட்டிகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப் படுபவை எனவும் வைத்தியசாலை ( Hospital system Banner Health) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மலேரியா நோய் தடுப்புக்கு பயன்படுத்தப்படும் chloroquine phosphate மாத்திரைகளை பயன்படுத்தலாம் என அண்மையில் அமெரிக்க அதிபர் குறிப்பிட்டதை தாம் அறிந்திருந்தாக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

தாங்கள் இந்த மாத்திரைகளை உட்கொண்டு 30 நிமிட நேரத்துள் தங்கள் அதன் தாக்கத்தை உணரத்தொடங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மலேரியா தடுப்புக்கான chloroquine phosphate மாத்திரைகளை கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்துவது தெடர்பில் இன்னும் தீர்க்கமான சோதனை முடிவுகள் வெளிவராத நிலையில் அதனை பயன்படுத்தும்படி சிபாரிசு செய்வது முறையானதல்ல என்கின்றனர்
பல ஆய்வாளர்கள்.

Leave a Reply