கொரோனாவால் தடுமாறுகிறது சீனா! பலி எண்ணிக்கை அதிகரிப்பு

496 Views

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளதாக சீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் அந்நாட்டின் ஏனைய நகரங்களுக்கும் மிக வேகமாக பரவியதையடுத்து அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளில் இறங்கியது.

எனினும், உயிரிழப்புக்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. முன்னதாக 30 பேர் வரையில் உயிரிழந்தனர் என தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

அதன்பின்னர் அந்த எண்ணிக்கை அதிகரித்து 80 என்று அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால் நேற்றைய தினம் அந்த எண்ணிக்கை 106 ஆக இருந்தது.

இந்நிலையில் இன்று காலை வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி சீனாவில் இதுவரை 132 பேர் பலியாகியுள்ளதாக அறிய முடிகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என சீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இலங்கையர்களை சுகாதார முறைப்படி இருக்குமாறும், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களை தவிர்க்குமாறும் சுகாதார அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply