கொரோனாவால் உலக பொருளாதாரம் தொடர்ச்சியான சவால்களை சந்தித்து வருகிறது சர்வதேச நாணய நிதியம்

339 Views

உலகளாவிய கொரோனா தொற்று காரணமாக உலக பொருளாதாரம் தொடர்ச்சியான சவால்களை சந்தித்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பல நாடுகளில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவியுள்ளது. இதனையடுத்து பல நாடுகளில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதோடு, பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. இதனால் சர்வதேச பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்து வருகிறது.

இதேவேளை கொரோனா பாதிப்பிற்கு மத்தியிலும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், உலகப் பொருளாதாரம் தொடர்ச்சியான சவால்களை சந்தித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜி- 20 நாடுகளின் நிதியமைச்சர்களுடனான கூட்டத்தில் பேசிய சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜியா , நெருக்கடிகாலத்தில் பயன் பெறுபவர்களின் விகிதம் அதிகரித்து வருவதாகவும், இதனால் ஜி 20 நாடுகள் வழங்கிய 11 றில்லியன் நிதி ஒரு மோசமான விளைவைத் தடுக்க உதவியது என்றும். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் சில சந்தர்ப்பங்களில் விரிவாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

பல நாடுகள் ஊரடங்குத் தளர்வுகளை கொண்டு வந்துள்ளதால், கொரோனா இரண்டாம் கட்ட அலைக்குள் செல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் இந்த இரண்டாவது அலையை எதிர்கொள்ள எல்லா நாடுகளும் தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply