கைதான அசாத் சாலி மீது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை

349 Views

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கொள்ளுபிட்டி பகுதியில் வைத்து அசாத் சாலி கைது செய்யப்பட்டார்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் படி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர் தடுத்துவைக்கப்பட்ட விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கினறார்.

Leave a Reply