கைகளில் சானிடைசர் தடவியபின் பட்டாசு வெடிக்கலாமா?

373 Views

தீபாவளி தினத்தில் கைகளில் சானிடைசர் தடவிய பின்பு பட்டாசு வெடிக்க கூடாது என மருத்துவர் ரமா தேவி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களினால் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகின்றது. தீபாவளிக் கொண்டாட்டத்தில் முக்கிய இடம் பிடிப்பது பட்டாசுகள்தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடிக்க வைப்பது வழக்கம்.

இந்நிலையில்,சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காயப் பிரிவு தலைமை மருத்துவர் ரமா தேவி தீ இந்து செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய கருத்தில்,

“கைகளில் சானிடைசரைத் தடவிக் கொண்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. சானிடைசர்களில் ஆல்கஹால் கலந்திருப்பதால் அவற்றுக்குத் தீப்பற்றக்கூடிய தன்மை உண்டு. அதனால் பட்டாசுகளை வெடிக்கும்போது, சானிடைசரைப் பயன்படுத்த வேண்டாம். வெடித்து முடித்த பிறகு கைகளைச் சோப்பு போட்டுக் கழுவிக்கொள்ள வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம் என்பதால் புகையைத் தவிர்ப்பது நல்லது. இதய பாதிப்பு உள்ளவர்களுக்காகச் சத்தம் வரக்கடிய வெடிகளைத் தவிருங்கள். கூடுதல் ஒலி, ஒளியைக் கொடுக்கும் பட்டாசுகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது” என்று  கூறியுள்ளார்.

Leave a Reply