கேரளாவிலிருந்து படகில் வெளிநாட்டுக்கு செல்லும் திட்டத்தில் ஈழத் தமிழர்கள்

306 Views

கேரள மாநிலத்தில் இருந்து கடல்வழிப் பயணம் மூலம் வெளிநாட்டுக்கு போகும் திட்டத்தில் ஈழத் தமிழர்கள் உள்ளதாக  இந்திய புலனாய்வுத் துறை எச்சரித்ததைத் தொடர்ந்து கேரளாவின் பல பகுதிகளில் அம்மாநில காவல்துறை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

முன்னதாக, மத்திய புலனாய்வுத்துறை இலங்கையின் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒருவரின் கீழ் 45 ஈழதமிழர்கள் கேரளாவை வந்தடைந்துள்ளதாக கேரள காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து செராய், முன்னாபம், பள்ளிப்புரம், எடவனக்காடு உள்ளிட்ட கேரள கடலோரப் பகுதிகள் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

நன்றி -The New Indian Express

Leave a Reply