502 Views
2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கெயிட்டி பகுதியில் இடம்பெற்ற பூமி அதிர்வினால் 250,000 மக்கள் கொல்லப்பட்டிருநதனர் மேலும் ஒரு மில்லியன் மக்கள் தமது வாழ்விடங்களையும் இழந்திருந்தனர்.
7.0 புள்ளி அளவுடைய இந்த பூமி அதிர்வின் பாதிப்புக்கள் பத்து ஆண்டுகளைக் கடந்தும் அந்த தேசத்தை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகின்றது. தொற்று நோய்கள், அரசியல் குழப்பம், தொடரும் இயற்கை அனர்த்தங்கள் என கெயிட்டியில் வாழும் மக்கள் மிகப்பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
பூமி அதிர்வின் பேரழிவில் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் இன்றுவரை தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை.

பூமி அதிர்வு ஏற்பட்ட ஒரு மாதத்தின் பின்னர் பரவிய கொலரா நோய்க்கு பல ஆயிரம் மக்கள் பலியாகியதுடன், பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டனர். ஐக்கிய நாடுகள் படையினரும் அங்கு நோய்களைப் பரப்பிதாக குற்றச்சாட்டுக்கள் உண்டு.



சிறீலங்காவில் இருந்து சென்ற படையினர் உட்பட பல நாட்டுப் படையினரும் அங்கு பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கியிருந்தனர்.



2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் அனர்த்தத்தாலும் அங்கு ஏறத்தாள 1000 மக்கள் கொல்லப்பட்டனர். பில்லியன் டொலர்களை உதவித் தொகையாக அனைத்துல தொண்டு நிறுவனங்கள் திரட்டிய போதும், அங்கு புனரமைப்பு பணிகள் மந்த கதியில் தான் நிகழ்கின்றன.
60 இலட்சம் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர் என உலக வாங்கியின் அறிக்கை கூறுகின்றது. 37 இலட்சம் மக்களுக்கு அன்றாட உணவுத் தேவையுள்ளதுடன் பலர் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கும் உட்பட்டுள்ளனர்.