கூட்டு புலனாய்வு அமைப்புக்களின் உதவியை நாடுகின்றது கனடா

கனடாவில் சீக்கிய மதத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியாவே பொறுப்பு என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ருடோ  நாடாளுமன்த்தில் தெரிவித்த பின்னர் அதற்கான ஆதரவுகளை ஐந்து கண்கள் (Five Eyes)  என்ற புலனாய்வு அமைப்பிடம் கோரியுள்ளார்.

ஜி-20 மாநாட்டில் இந்த புலனாய்வுக் கட்டமைப்பில் உள்ள அமெரிக்கா, கனடாஇ அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இயைந்து கண்டன அறிக்கையை வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டதாகவும் ஆனால் இந்தியாவுடன் உள்ள வர்த்தக உறவுகளை காரணம் காட்டி ஏனைய நாடுகள் மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படும் கருத்துக்களை கனடாவின் வெளிவிவகார அமைச்சகம் மறுத்துள்ளது.

அதேசமயம் நிஜாரின் கொலை தொடர்பாக கனடாவுக்கு தேவையான ஆதாரங்களை இந்த புலனாய்வு அமைப்பே வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜுன் 18 ஆம் நாள் நிஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவின் புலனாய்வுத்துறையான றோவின் பங்கு இருப்பதாக தெரிவித்துள்ளன கனடா கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தின் றோவின் தலைவர் பவன்குமார் ராஜ் என்பவரை நாட்டை விட்டு வெளியேற்றியிருந்தது.

அதற்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனேடிய தூதரகத்தில் பணியாற்றிய இரஜதந்திரி ஒருவரை வெளியேற்றியுள்ளது.

இருந்தபோதும் கனடாவின் இந்த விசாரணைக்கு இந்தியா ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் என அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் கேட்டுள்ளன.

அதேசமயம், கனடா மக்களுக்கான நுளைவு அனுமதியை கடந்த வியாழக்கிழமை (21) நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளதுடன், கனடாவுக்கு செல்லும் மற்றும் கனடாவில் வாழும் இந்திய மக்களுக்கு அபாய எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது.