குர்திஸ் படைகள் மீது தாக்குதலை ஆரம்பித்தது துருக்கி; போராடும் இனங்களுக்கு இன்னுமொரு படிப்பினை

343 Views

அமெரிக்கப்படைகள் சிரியாவில் குர்திஸ் பகுதிகளை விட்டு வெளியேறியகையேடு அப்பகுதிகளை இலக்குவைத்து துருக்கியப்படைகள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ள.குர்தீஸ் படைகளின் விநியோகப்பாதையை இலக்குவைத்து
துருக்கியப்படையினர் கடும் ஆட்லறி தாக்குதல்களை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.AP19280349247289 குர்திஸ் படைகள் மீது தாக்குதலை ஆரம்பித்தது துருக்கி; போராடும் இனங்களுக்கு இன்னுமொரு படிப்பினை

இஸ்லாமிய பயங்கர வாத முகம்கொடுக்கமுடியாத நிலையில் அமெரிக்காவும் அதன் கூட்டுப்படைகளும் திணறியபோது குர்தீஸ் போராளிகள் அந்த பயங்கரவாத அமைப்புகளை தீரமுடன் எதிர்கொண்டு முறியடித்தனர்.

குர்தீஸ் போராளிகளின் நியாயமான போராட்டத்திற்கு தாம் உதவுவோம் எனக்கூறி கடுமையான சமர்க்களங்களில் அமெரிக்கா அவர்களைப்பயன்படுத்திவந்தது. தற்போது தமது வேலை முடிந்ததும் துருக்கிய படைகளின் கொலைவளையத்தினுள் அவர்களை சிக்கவைத்துவிட்டு அமெரிக்கா வெளியேறியுள்ளது.81416 Local citizens wave Kurdish and American flags during the Kurdish regional government new years celebration in Dahuk in 2008 குர்திஸ் படைகள் மீது தாக்குதலை ஆரம்பித்தது துருக்கி; போராடும் இனங்களுக்கு இன்னுமொரு படிப்பினை

துருக்கியின் தாக்குதலிற்கு முன்னதாக அமெரிக்க படைகளை அந்த பகுதியிலிருந்து விலக்கிக்கொண்டுள்ளமைக்காக கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  அமெரிக்கா குர்திஸ் மக்களை கைவிடவில்லை என தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அப்பட்டமான ஒரு நம்பிக்கைத் துரோகம் அவதானிகள் கூறுகிறார்கள்.

Leave a Reply