இந்திய அரசாங்கம் காஸ்மீரில் பெருமளவு சிறுவர்களை கைதுசெய்து தடுத்துவைத்துள்ளது என தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
காஸ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதன் காரணமாகவும் அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதன் காரணமாகவும் காஸ்மீரின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதாக பிபிசி தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளை கட்டுப்படுத்துவதற்காக சிறுவர்களையும் இளைஞர்களையும் அதிகாரிகள் கைதுசெய்கின்றனர் என காஸ்மீரில் பல பகுதிகளில் பொதுமக்கள் தெரிவித்தனர் என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நபர் ஒருவர் தான் தனது 16 வயது மகனுடன் சேர்த்து தடுத்துவைக்கப்பட்டதாக தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ள பிபிசி அவர்கள் இந்திய பாதுகாப்பு படையினரால் பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக முகத்தை மூடியபடி கருத்து தெரிவித்தனர் என குறிப்பிட்டுள்ளது.