கடந்த இரண்டு நாட்களில் இடம்பெற்ற இரு வேறு தாக்குதல்களில் இந்திய இராணுவத்தினர் 3 பேரும் காவல்துறை அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டதாக காஸ்மீர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீரின் கொகெர்நாக் பகுதியில் இந்திய படையினர் கடந்த செவ்வாய்கிழமை (12) படை நடவடிக்கையில் ஈடுபட்டபோது புதன்கிழமை (13) அதிகாலை மோதல்கள்
இரண்டு படையினரும், கேணல் மற்றும் மேஜர் தர அதிகாரிகளும் இந்த தாக்கதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்கதல்களில் இரண்டு ஆயுததாரிகளும் கொல்லப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள காஸ்மீருடன் இந்திய பகுதியில் உள்ளதை இணைக்க கோரி அங்கு 1989 ஆம் ஆண்டில் இருந்து போராட்டங்கள் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.